ஆகஸ்ட் 10, 2025 அன்று, நூலகத்தின் சிறுவர் பகுதியில் தமிழ் கதைசொல்லல் மற்றும் ஆங்கிலக் கதை வாசிப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன. கூடுதலாக, இந்தப் பிரிவுக்கு தவறாமல் வருகை தரும் சிறுவர்களை ஊக்குவிப்பதற்காக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. புத்தக விநியோகமானது , தொடர்ச்சியான வாசிப்பை ஊக்குவிப்பதையும், வீட்டு நூலகங்களை உருவாக்க குழந்தைகளை ஊக்குவிப்பதையும், புத்தகங்கள் மீதான நீடித்த நேயத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



